இந்தியா

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் குறுக்கீடு: மோடி குற்றச்சாட்டு

webteam

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவது ஏன்? என காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குஜராத்தின் பலன்பூரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மோடி, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவது ஏன் என காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார். மணிசங்கர் அய்யர் வீட்டில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், இந்திய முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை சந்தித்துப் பேசியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானதாக கூறிய பிரதமர் மோடி, அதற்கு அடுத்தநாளே தன்னை தரக்குறைவான வார்த்தையால் மணிசங்கர் அய்யர் விமர்சித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகே, குஜராத்தின் பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழை மக்கள் மற்றும் தன்னையும் காங்கிரஸ் அவமதித்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் இயக்குநர் சர்தார் அர்ஷத் ரஃபீக், குஜராத் முதலமைச்சராக அகமது படேலை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.