கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமாரிடம் சட்டவிரோத பண பரிவர்த்தனை யில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு செப்டம்பர் 3 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 51 நாட்கள் சிறையில் இருந்த அவர், கடந்த மாதம் 24 ஆம் தேதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.