இந்தியா

இழக்கிறது காங்கிரஸ், வெல்கிறது பாஜக: பிரகாஷ் ஜவடேகர் கருத்து!

இழக்கிறது காங்கிரஸ், வெல்கிறது பாஜக: பிரகாஷ் ஜவடேகர் கருத்து!

webteam

காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆளும் மாநிலங்களில் ஒவ்வொன்றையாக இழந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சரும் கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. 11.30 மணி நேர நிலவரப்படி பாஜக 112 இடங்களிலும் காங்கிரஸ் 68 இடங்களிலும் மத சார்பற்ற ஜனதா தளம் 39 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து பாஜக தொண்டர்கள் கர்நாடகாவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும் கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, ’கர்நாடக மக்கள் சிறந்த ஆட்சி வேண்டும் என்பதற்காக, பாஜகவை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இது பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி. காங்கிரஸ் கட்சி தாங்கள் ஆளும் மாநிலங்களில் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு மாநிலமாக வெற்றி பெற்று வருகிறோம்’ என்று தெரிவித்தார்.