காங்கிரசில் உள்ள பாஜக ஆதரவாளர்களை எப்போது கட்சியில் இருந்து நீக்குவீர்கள் என ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரசில் உள்ள சில நிர்வாகிகள் பாஜகவுக்காக பணியாற்றி வருகின்றனர் என்றும், அவர்கள் களையெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இந்நிலையில் ராகுலின் பேச்சை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ள திக்விஜய் சிங், களையெடுப்பு எப்போது தொடங்கும் என வினவியுள்ளார். தாம் மத்திய பிரதேச முதல்வராக இருந்த போது குஜராத் தேர்தல் பரப்புரையில் இந்து மக்களை காயப்படுத்தும் என்பதால் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
ஆனால் உண்மை என்னவெனில் ஆர்.எஸ்.எஸ் இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்துகிறது எனவும் விமர்சித்தார்.