உத்தரப்பிரதேசத்தில் தனித்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 135ஆவது ஆண்டு விழா கூட்டத்தில் பிரியங்கா உரையாற்றினார்.
குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக யார் பொய் சொல்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட அவர், இவ்விவகாரத்தில் உத்தரப்பிரதேச எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப அஞ்சுவதாகவும் விமர்சித்தார்.
ஆனால் காங்கிரஸ் ஒருபோதும் அச்சமடைந்து தயக்கம் காட்டாது என்ற தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலை தனித்து எதிர்கொள்ள தயாராகி வருவதாக தெரிவித்தார்.