மோடி, தேஜஸ்வி யாதவ் pt web
இந்தியா

பீகார் |"காங்கிரஸை துப்பாக்கி முனையில் மிரட்டியே.," - பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு !

காங்கிரஸை துப்பாக்கி முனையில் மிரட்டியே, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்துள்ளது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

PT WEB

காங்கிரஸை துப்பாக்கி முனையில் மிரட்டியே, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்துள்ளது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பிகார் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, “தேஜஸ்வி யாதவை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், வேட்புமனு வாபஸ் பெறும் இறுதி நாளுக்கு ஒருநாள் முன்பு, தேஜஸ்வி யாதவின் RJD கட்சி, காங்கிரஸ் தலைவரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதன் மூலம், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்தது. இது ஒரு குண்டர் சதி” என்று குற்றம் சாட்டினார். மேலும், “தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணி உடையும் என்றும், இவர்களால் பிகாருக்கு நல்லது நடக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி

243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகா கட்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மேலும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் இருக்கிறது. இந்நிலையில், பீகார் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.