இந்தியா

ரஃபேல் விமான ஒப்பந்ததில் முறைகேடா?: பாதுகாப்புத்துறை விளக்கம்

ரஃபேல் விமான ஒப்பந்ததில் முறைகேடா?: பாதுகாப்புத்துறை விளக்கம்

webteam

இந்திய விமானப் படைக்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் ஏற்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ரபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பாக மத்திய அரசு ரகசியம் காப்பது ஊழல் நடந்திருப்பதை காட்டுவதாக ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றிய போதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர்.

இந்த நிலையில் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில் முந்தைய காங்கிரஸ் அரசில் ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட பத்து ஆண்டுகள் முயற்சி செய்தும் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முந்தைய அரசு செய்ய முயன்ற ஒப்பந்தத்தை விட சிறந்த ஒப்பந்தத்தை தற்போதைய அரசு செய்துள்ளதாகவும்,முந்தைய அரசு செய்ய முயன்ற ஒப்பந்தத்தில் விமானங்களை வாங்குவதற்கு மட்டுமே வழிவகை செய்யப்பட்டதாகவும், தற்போதைய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.