இந்தியா

முறைகேட்டுக்கு முயற்சிக்கும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

முறைகேட்டுக்கு முயற்சிக்கும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

webteam

அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடனும் ஒப்புகைச் சீட்டு வசதி இணைக்கப்படும் வரை வாக்குச் சீட்டு முறையை பின்பற்ற வேண்டும்

என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ’வாக்குப்பதிவு

இயந்திரங்களில் முறைகேடு செய்ய பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வாங்க போதிய

நிதியை தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு தரவில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார். ஒப்புகை சீட்டு வசதி இணைக்கப்படும் வரை

வாக்குசீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு கட்சியினரும் முன்வைத்து வருகின்றனர்.