இந்தியா

'அரசு ஊழியர் ஊழல் செய்தால் முன்கூட்டியே ஓய்வு' -மத்திய அரசு உத்தரவு !

'அரசு ஊழியர் ஊழல் செய்தால் முன்கூட்டியே ஓய்வு' -மத்திய அரசு உத்தரவு !

jagadeesh

ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுநலன் கருதி முன்கூட்டியே ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், மத்திய அரசு ஊழியர் ஒருவரின் செயல்திறனை ஆய்வு செய்வதற்கும், தேவைப்பட்டால், பொதுநலன் கருதி அவரை முன்கூட்டியே ஓய்வு பெற செய்வதற்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, 50 அல்லது 55 வயதை எட்டியவர்கள் மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களின் பணி பதிவேட்டை பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊழலில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் பணித்திறன் இல்லாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்படும் ஊழியர்களுக்கு 3 மாதம் நோட்டீஸ் அல்லது 3 மாதம் ஊதியம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.