இந்தியா

"பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-ஐ மூடும் திட்டமில்லை": மத்திய அமைச்சர் தகவல்

webteam

பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி,என்.எல் ஆகியவ‌‌ற்றை‌ மூடும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடும் நிதி நெருக்‌கடியில் சிக்கத் தவிக்கும் இவ்விரு நிறுவனங்களையும் மூடும் எண்ணம் இல்லை என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார். துறை சார்ந்த போட்டி மற்றும் ஊழியர்க ளின் அதிகப்படியான சம்பளம் உள்ளிட்ட காரணங்களால் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன என்றும் இவற்றை மீட்டெடுக்க விரிவா‌ன திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். 

பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழிய‌ர்களின் சம்பளம் மொத்த வருமானத்தில் 75 புள்ளி 06 சதவிகிதமாகவும், எம்.டி.என்.எல் நிறு வனத்தின் மொத்த வருமானத்தில் 87 புள்ளி 15 சதவிகிதமாகவும் உள்ளதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதே நேரம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்களின் சம்பளம், அந்தந்த நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் 2 புள்ளி 9 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வ‌ரையே இருப்பதாகவும் அமைச்சர் ‌கூறினார்.