இந்தியா

கொரோனா நோய் தொற்று அதிகரிப்பால் இடுக்கி குமுளியில் முழு ஊரடங்கு !

கொரோனா நோய் தொற்று அதிகரிப்பால் இடுக்கி குமுளியில் முழு ஊரடங்கு !

kaleelrahman

பிறப்பிடம் கண்டறிய முடியாத நோய் பாதிப்பு அதிகரிப்பால் இரு மாநில எல்லையான குமுளி, தேக்கடியில் முழு ஊரடங்கு.


தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடியில்  பிறப்பிடம் கண்டறியப்படாத நோயாளிகள் அதிகரித்து வருவதாலும் இரு மாநில எல்லையை இணைக்கும் பகுதியான குமுளி, தேக்கடி முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இதனால் நகர்பகுதிகள் முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தன. தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் தொடர்புகளாலும், கொரோனா நோய் தொற்றின் பிறப்பிடம் காண முடியாத நோயாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் தற்போது இடுக்கியில் 307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுவரை 1,248 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரு மாநில இணைப்பு பகுதிகளான குமுளி, தேக்கடி பகுதிகளில் தற்போது 25க்கும் அதிமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பிறப்பிடம் கண்டறியப்படாதோர் 10க்கும் அதிகமானோர் உள்ளனர்.


இதையடுத்து குமுளி தேக்கடி நகர்பகுதியை உள்ளடக்கிய குமுளி ஊராட்சி பகுதிகள் பாதுகாப்பு மண்டலங்களுக்குள் கொண்டுவரப்பட்டு முழுவதுமாக மூடப்பட்டது, மருந்துக்கடைகள், காய்கறி, மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் புழங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முழுவதுமாக முடக்கப்பட்டது. இதையடுத்து குமுளி, தேக்கடி நகர்பகுதிகள் முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தன.