இந்தியா

சட்டவிரோதமாக இஸ்லாமிய பள்ளி: ஜாகிர் நாயக் மீது புகார்

webteam

இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பள்ளி சட்டவிரோதமானது என்று மும்பை மாநகராட்சி கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், பயங்கரவாதிகளை துாண்டி விடுவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர் தற்போது வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், தெற்கு  மும்பையில் உள்ள அவரது சர்வதேச இஸ்லாமிய பள்ளி அங்கீகாரம் இன்றி, சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாக மாநகராட்சியின் கல்வி ஆய்வாளர் பி.பி.சவான் தெரிவித்துள்ளார். 
ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இந்த பள்ளிக்கூடத்தை சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி பொறுப்பெடுத்து நடத்தி வருகிறார். மாநகராட்சியின் இந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்த சதி தீட்டப்படுவதாகக் குறிப்பிட்டார்.