கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா உணவகத்தில் இருந்து உணவு வரவழைத்து தலித் இல்லத்தில் வைத்து உண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தலித்துகளை அவமதித்ததாக எடியூரப்பா மீதும் மற்ற பாரதிய ஜனதா நிர்வாகிகள் மீது புகார் பதியப்பட்டுள்ளது. கர்நாடகா பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை டுமகுரு பகுதியில் தலித் இல்லத்தில் சென்று உணவருந்தினார். தலித் இல்லத்தில் தயாரித்த உணவை விடுத்து கடையில் இருந்து உணவுவாங்கி வந்து அவர் உண்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அரசியல் உள்நோக்கத்தோடு தன் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறுவதாக எடியூரப்பா கூறியுள்ளார். 2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில அரசியல் தலைவர்கள் மக்களிடம் நற்பெயரைப்பெற பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றி வரும் நிலையில் எடியூரப்பா மீது தலித்துகளை அவமதித்ததாக எழுந்துள்ளது.