இந்தியா

மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வழங்க நிறுவனங்கள் மறுத்துவிட்டன: அரவிந்த் கெஜ்ரிவால்

மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வழங்க நிறுவனங்கள் மறுத்துவிட்டன: அரவிந்த் கெஜ்ரிவால்

Veeramani

எங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வழங்க பைசர், மாடர்னா தடுப்பூசி நிறுவனங்கள் மறுத்துவிட்டன டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்

இது தொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “தடுப்பூசிகளுக்காக பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களுடன் நாங்கள் பேசினோம், அந்த இரு நிறுவனங்களும் எங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்க மறுத்துவிட்டன. அவர்கள் இந்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்குவோம் என்று கூறியுள்ளனர். எனவே தடுப்பூசிகளை இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்குமாறு மத்திய அரசிடம்  முறையிட்டுள்ளோம்” என தெரிவித்தார்