இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : இந்திய ராணுவத்தளபதி உட்பட 5 பேர் வீர மரணம்

webteam

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தின் தளபதி, மேஜர் உட்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியான ஹந்த்வாராவில் பயங்கரவாதிகள் ஊடுருவியதால், அவர்களை தாக்க இந்திய ராணுவத்துடன் இணைந்து ஜம்மு-காஷ்மீர் போலீஸார் சென்றனர். குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவில் இருதரப்புக்கும் இடையே பயங்கர தூப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 8 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகளிடம் இருந்து பெருவாரியான மக்களை ராணுவத்தினர் காப்பாற்றினர்.

ஆனால் ராணுவத்தளபதி அஷுதோஷ் ஷர்மா, மேஜர் அஜூஜ் சுத், ராணுவ வீரர்கள் நாயக் ராஜேஷ், லான்ஸ் நாயக் மற்றும் காஷ்மீர் உதவி ஆய்வாளர் ஒருவர் வீர மரணம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தரப்பிலிருந்து இருவர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது மேலும் இந்திய ராணுவப்படையினர் அங்கே குவிக்கப்பட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.