உச்ச நீதிமன்றம் கூகுள்
இந்தியா

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்.. கொலீஜியம் பரிந்துரை!

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

Prakash J

உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர். கொலீஜியம் என்பது ஐந்து நீதிபதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு பரிந்துரைக்கும் நபர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும். அதன்பின் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார்.

அதன்படி, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.டி.ரவிகுமார் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், நீதிபதி கே.வினோத் சந்திரனை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

கேரளாவைச் சேர்ந்த சஞ்சீவ் கண்ணா, அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2011ஆம் ஆண்டு பதவியேற்றார். அதைத் தொடர்ந்து கடந்த 2023இல் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதேபோல் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றவும் தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதேவை மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.