இந்தியா

இறப்புக்கு முன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த சித்தார்த்தா

இறப்புக்கு முன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த சித்தார்த்தா

webteam

காஃபி‌ டே நிறுவன உரிமையாளர் சித்தார்த்தா இறப்பதற்கு முன்பு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வந்தது தெரியவந்துள்ளது.

காஃபி டே நிறுவனத்திற்கு தற்போது சுமார் 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், 75 சதவிகித உரிமையாளர் பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருப்பதும் பங்குச் சந்தையில் நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள காஃபி டே நிறுவனத்தின் கடன்சுமை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகரித்துள்ளது. 

இதற்கிடையில், ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட காஃபி டே நிறுவன உரிமையாளர் சித்தார்த்தாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்த காவல்துறை உதவி ஆணையர் டி.கோதண்டராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மங்களூரு காவல் ஆணையர் சந்தீப் பாட்டில் தெரிவித்துள்ளார். பெங்களூரு சென்ற காவல்துறையினர் காஃபி டே நிறுவனத்தின் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். 

மேலும் சிலரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வழக்கு தொடர்பாக இரண்டு மொபைல் ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.