மும்பையில், தெருவில் நடந்து சென்ற பெண் மீது தென்னை மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்தார். கடந்த வியாழனன்று மும்பையில் மழை பெய்து ஓய்ந்த நேரத்தில் நடைப்பயிற்சி முடித்து காஞ்சன் ரகுநாத் எனும் 57 வயதான பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென தென்னை மரம்முறிந்து காஞ்சன் தலை மீது விழுந்ததில் அதே இடத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பலனின்றி காஞ்சன் ரகுநாத் உயிரிழந்தார்.