இந்தியா

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியாக உயர்வு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

JustinDurai
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்துள்ளதை தொடர்ந்து, கரையோர வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை நீர் செல்லும் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புதரை உள்ளிட்ட அணை நீர் செல்லும் இடுக்கி அணை வரையிலான நீரோட்ட பாதைகளுக்கு, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்த பின்பு மூன்றாம் கட்ட இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையிலிருந்து 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரிநீர் திறந்து விடப்படும்.
ஏற்கனவே கடந்த அக்டோபர் 29ம் தேதி அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்தபோது "ரூல் கர்வ்' முறைப்படி கேரளாவிற்குள் உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதே முறைப்படி நவம்பர் 30ம் தேதி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற விதிமுறைகள் உள்ளது.