நிதிஷ் குமார் புதிய தலைமுறை
இந்தியா

பீகார் | அமைச்சரவை விரிவாக்கம்.. பாஜகவுக்கு வாய்ப்பு!

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

PT WEB

பீகாரில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியு கட்சி, ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பாட்னாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் 7 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த 7 பேருமே ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். 7 பேர் பதவியேற்றதை அடுத்து அமைச்சரவையின் பலம் 36 ஆக அதிகரித்துள்ளது.

நிதிஷ்குமார்

முன்னதாக பீகார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்திருந்தார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கைப்படி இம்முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். 243 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 84 பேரும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 48 பேரும் உள்ளனர். பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுள்ளது.