ரங்கசாமி Pt web
இந்தியா

#PuducherryElectionResults | தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!

புதுவை சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

PT WEB

30 தொகுதிகள் கொண்ட பாண்டிச்சேரியில், ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் களமிறங்கிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் தற்போதைய முதல்வருமான ரங்கசாமி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் தற்போது தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

இத்தேர்தலில் அவர், காங்கிரஸ் வேட்பாளர் வி.வைத்தியலிங்கத்திற்கு எதிராகப் போட்டியிட்டு, தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். தட்டாஞ்சாவடியில் ரங்கசாமியின் வெற்றி, என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.