இந்தியா

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் - வெளியானது தெளிவான வீடியோ காட்சிகள்

JustinDurai
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் தொடர்பான தெளிவான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
பன்வீர்பூர் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு வரவிருந்த துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க திரண்டிருந்த விவசாயிகள் மீது பாரதிய ஜனதா தொண்டர்கள் வந்த கார் மோதியது. அப்போது பதிவு செய்யப்பட்ட தெளிவற்ற காட்சிகள் முதலில் வெளியாகின. இதில் சரிவர காட்சிகள் தெரியாத நிலையில் தற்போது தெளிவான வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
அதில் விவசாயிகள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வரும் ஒரு கார் அவர்கள் மீது மோதுகிறது. அப்போது விவசாயிகள் கூக்குரல் எழுப்பியபடி நாலாபுறமும் சிதறி ஓட, மோதிய காருக்குப் பின்னால் மற்றொரு கார் வருகின்றது. அந்தக் காரில் தான் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது.