இந்தியா

உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

webteam

திருவாரூரில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டனர்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து துறை பணியாளர்களும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்யலாம் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும்  தூய்மைப் பணியாளர்கள், பணிக்கு செல்லும் முன்பாக அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தனர்.

அவர்களுக்கு நகராட்சி ஆணையர் சங்கரன் பயிற்சி அளித்தார். தூய்மை பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன்பின் தூய்மை பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டு பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்