இந்தியா

தூய்மையான கலை, பொறியியல் கல்லூரியில் தமிழகம் முதலிடம்

தூய்மையான கலை, பொறியியல் கல்லூரியில் தமிழகம் முதலிடம்

webteam

இந்தியாவில் தூய்மையை பராமரிக்கும் தலைசிறந்த கலை, பொறியியல் கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த கல்லூரிகள் முதலிடம் பிடித்துள்ளது. 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இதில் இந்தியாவில் உள்ள தூய்மையை பராமரிக்கும் தலைசிறந்த 25 கல்லூரிகளில் 12 தமிழகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் தூய்மையான கல்லூரிகள் விருதுக்கான போட்டிக்கு 3,500 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இந்த போட்டியில் பல்கலைக்கழகம், கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசுக் கல்லூரி ஆகிய 4 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பல்கலைக்கழகங்கள் பிரிவில் ஹரியானாவின் ஓபி ஜிண்டால் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றது. இதேபோன்று கலை அறிவியல் கல்லூரிகள் பிரிவில் ஈரோட்டில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியும், பொறியியல் கல்லூரிகள் பிரிவில் கோவையிலுள்ள அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் முதலிடம் பெற்றள்ளது.