இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

rajakannan

10, 11, 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் சிபிஎஸ்இ மதிப்பிடும் முறையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அத்துடன், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வுகள் பல்வேறு ஆலோசனைக்கு பின்பே ரத்து செய்யப்பட்டது எனவும் சிபிஎஸ்இ வாரியத்தின் முடிவில் தலையிட விரும்பவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல், வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தன்னுடைய கருத்தினை முன் வைத்துள்ளது.