இந்தியா

ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை : ஜன. 5 வரை கல்லூரி மூடல்...

ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை : ஜன. 5 வரை கல்லூரி மூடல்...

webteam

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறையை கண்டித்து, உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போதும் வன்முறை ஏற்பட்டது.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பேரணியாக செல்ல முயன்ற அவர்களை பல்கலைக்கழக வாயில் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். எனினும் தடுப்புகளை மீறி, காவலர்களுடன் கைகலப்பில் மாணவர்கள் ஈடுபட்டதாகவும், கற்களைக் கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து முதலில் தடியடி நடத்திய காவல்துறை பின்னர் கண்ணீர் புகைக்குண்டுகளையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து மாணவர்களை கலைத்தது. இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் அபிபுல்லா கான் கூறியுள்ளார். மேலும், விடுதிகளில் இருந்த மாணவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.