திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமுறை அர்ச்சகர்களுக்கும், பணி நியமன அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து கொண்டே வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். புனித ஸ்தலமாக விளங்கும் இங்கு அர்ச்சகர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கோயில் நிர்வாகத்தினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பிரம்மோற்சவத்தின் போது கோவிலின் பிரதான அர்ச்சகர் ரமண தீட்ச்சிதர், தனது பேரனை நேரடியாக கோயில் கருவறை வரை அழைத்து சென்றது குறித்து தேவஸ்தானம் விளக்கம் கேட்டுள்ளது. இதற்கு பணி நியமன அர்ச்சகர்களே காரணம் என ரமண தீட்ச்சிதர் குற்றம் சாட்டிய நிலையில், பணி நியமன அர்ச்சகர்களில் முக்கிய நபரான நரசிம்மச்சாரியர் கண்டனம் தெரிவித்துள்ளார்.