தமிழர்கள் - வடமாநிலத்தவர் வாக்குவாதம் புதியதலைமுறை
இந்தியா

நாக்பூர் | தமிழர்கள் - வடமாநிலத்தவர் இடையே வாக்குவாதம்.. நடந்தது என்ன?

இதற்காக, தமிழ்நாட்டிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 700 பேர், வாரணாசிக்கு சிறப்பு ரயிலில் சென்றனர்.

PT WEB

மூன்றாவது காசி தமிழ் சங்கமத்தை, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு - காசி இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதற்காக, தமிழ்நாட்டிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 700 பேர், வாரணாசிக்கு சிறப்பு ரயிலில் சென்றனர்.

அப்போது, நாக்பூர் ஜோலாப்பூர் பகுதியில், முன்பதிவு இல்லாத நபர்கள் ஏறியுள்ளனர். இதனால், தமிழக கலைஞர்களுக்கும் - வட மாநிலத்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ரயிலின் கண்ணாடி, ஜன்னல்கள் உள்ளிட்டவற்றை, வட மாநிலத்தவர் உடைத்துள்ளனர்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக, தென்னக பண்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நாட்டுப்புற கலஞர்கள் பேருந்துகள் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து இன்னும் இரண்டு பிரிவுகளாக நாட்டுப்புற கலைஞர்கள் செல்லவுள்ள நிலையில், அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, தஞ்சாவூரில் உள்ள தென்னக பன்னாட்டு மையத்திடம் கேட்டபோது, பாதுகாப்பு தொடர்பாக ரயில்வே நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர்