கட்சியின் வளர்ச்சிக்கு அவர்கள் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்த அவர், அவர்களின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, சிறையில் உள்ள தனது நிர்வாகிகள் ஆஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ்-க்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவர் வெளியிட்ட அந்த கடிதத்தில், ஆஷு மற்றும் சௌரவ், நீங்கள் சிறைக்கு சென்று இன்று 6-வது நாள். என் சகோதரர்களான உங்களை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்று சொல்ல முடியாது. கடந்த 3 மாதங்களாக உங்களது எண்ணற்ற அழைப்புகள், மெசேஜ்களுக்கு நான் பழகிவிட்டேன். பல நேரங்களில் நான் அதை புறக்கணித்தாலும், நீங்கள் இருவரும் எப்படியாவது எல்லாவற்றையும் சரி செய்து விடுவீர்கள் என்று எனக்கு தெரியும். கடந்த 3 மாதங்களாக CJP-யின் முகமாக மக்கள் என்னை பார்த்திருக்கலாம். ஆனால் உண்மையில் கட்சியை நடத்தியது, கட்டமைத்தது, அனைத்தையும் ஒன்றாக வைத்திருந்தது நீங்கள் இருவரும்தான். தற்செயலாக நான் CJP-யை தொடங்கியிருக்கலாம், ஆனால் அதை இன்று லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக மாற்றியது உங்களது அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் தைரியம்தான்.
நீங்கள் இருவரும் இல்லாமல் CJP இதில் பாதியை கூட சாதித்திருக்காது. இந்த இயக்கத்திற்காக நீங்கள் எவ்வளவு தியாகம் செய்துள்ளீர்கள் என்பது பலருக்கு தெரியாது. இன்று உங்கள் காவலின் கடைசி நாள். நீங்கள் இருவரும் விடுதலையாகி வெளியே வருவதை பார்ப்பதை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை. என் சகோதரர்களை மீண்டும் எனக்கு வேண்டும். நீங்கள் அனுபவிக்கும் வேதனைக்காக வருந்துகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கும் மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் இடைவிடாத அழைப்புகளையும், மெசேஜ்களையும் மிஸ் செய்கிறேன். அந்த போன் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.விரைவில் திரும்பி வாருங்கள் சகோதரர்களே என்று அபிஜித் தீப்கே தனது கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.