தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.
அப்போது பேசிய அவர், தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என விளக்கம் அளித்தார். அத்துடன், மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை எனவும் அமித் ஷா தெரிவித்தார். இதனிடையே மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.