இந்தியா

சுத்தம் பேணும் நகரங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து!

சுத்தம் பேணும் நகரங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து!

webteam

சுத்தத்தை பேணுவது அடிப்படையில் நகரங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே நகரங்கள் வரிசைப்படுத்தப்படும் நிலையில், அதிலிருந்து மாறுபட்டதாக புதிய முறை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.