இந்தியா

ரசாயனக் கசிவு குறித்து சமூக வலைத்தள பதிவு : ஆந்திராவில் மூதாட்டி மீது வழக்கு

webteam

ரசாயனக் கசிவு தொடர்பாகத் தவறான தகவல் பரப்பியதாக மூதாட்டி ஒருவர் மீது ஆந்திர சிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பலர் உயிரிழந்தனர். அத்துடன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் ஆந்திராவில் பூதாகரமாக வெடித்துள்ளது. அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ரசாயனக் கசிவு தொடர்பாகத் தவறான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக குண்டூரைச் சேர்ந்த ரங்கநாயகம்மா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் ரகுநாத் என்ற நபரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் செயல் என்றும் கூறியுள்ளனர்.