கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் web
இந்தியா

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்.. சமத்துவத்துடன் கொண்டாடிய மக்கள்!

நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது..

PT WEB

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முக்கிய தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணியில் பிரமாண்ட பந்தல் மற்றும் கிறிஸ்துமஸ் டவர் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மத வேறுபாடின்றி மக்கள் சமத்துவத்துடன் பங்கேற்று, கிறிஸ்துமஸ் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ்கொண்டாட்டங்கள் களைகட்டின.டெல்லியில் உள்ள செயின்ட் தாமஸ்தேவலாயம் வண்ண விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.

ஜம்மு காஷ்மீரின்ஸ்ரீநகரில் அமைந்துள்ள புனிதகத்தோலிக்க தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் மின் விளக்குகளால் ஜொலித்தன.

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டுவீதிகளில் வண்ணவிளக்குகள் தோரணங்களாகவும், பல்வேறுவடிவங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன.

கிறிஸ்துமஸ்

ஆந்திர மாநிலம்விஜயவாடாவில் பிரமாண்டமாகஅமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அனைவரதுகவனத்தையும் ஈர்த்தது.

கர்நாடக மாநிலம் கலபுராகியில்உள்ள செயின்ட் மேரிஸ் தேவலாயம் வண்ண விளக்குகளால் பிராகசித்தது. தெலங்கானாவின் செகந்திரபாத் செயின்ட் மேரிஸ்பெசிலிகா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ்சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கனககுன்றுபொழுது போக்கு பூங்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுநடைபெற்ற கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் விதமாக சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம், சாந்தோம் புனித தாமஸ் பசிலிக்கா ஆலயம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், தூத்துக்குடி பனிமயமாதா பேராலாயம், மதுரை தூய மரியன்னை தேவாலயம், புதுச்சேரி கப்ஸ் தேவாலயம் உள்ளிட்ட முக்கிய தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணியில் 400 அடி நீளம் 60 அடி அகலத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் மின்விளக்குகளை கொண்டு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தியான மண்டபம் வாசலில் 55 அடி உயரம், 30அடி அகலத்தில் கிறிஸ்துமஸ் டவர் அமைக்கப்பட்டுள்ளது. பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலிக்கிறது.

தூத்துக்குடியில், வெளிநாட்டுக்கு நிகராக கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெற்றது. சாலையின் இரு பக்கங்களிலும் பொதுமக்கள் திரண்டு, அலங்கார வாகன அணிவகுப்பை கண்டு ரசித்தனர். பாய்மரக்கப்பல், பீரங்கி கப்பல், நண்டு, ஆக்டோபஸ், ஹெலிகாப்டர், ரோபோ போன்ற அலங்கார வாகனங்கள், மின்னொளியில் இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் என கிறிஸ்துமஸ் கேரல் களைகட்டியது.

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கடற்கரை கிராமத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது. கிராம மக்கள், டிஜே பாடல் மற்றும் ஆடலுடன் கிறிஸ்து பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த புனிதமரியன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ்விழா கொண்டாடப்பட்டது. இதில், மதவேறுபாடின்றி ஏராளமான பொதுமக்கள்கலந்துகொண்டனர். சமத்துவத்தைஎடுத்துரைக்கும் வகையில் சிறார்கள்முருகன், மீனாட்சியம்மன், இஸ்லாமியர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடங்களில் தேவாலயத்திற்கு வருகை தந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் தேவாலாயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மத வேறுபாட்டை கடந்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பலரும் குடும்பத்தினருடன் பங்கேற்று உற்சாகமடைந்தனர்.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில், பெண்கள் முளைப்பாரி வைத்து கும்மியடித்து வழிபாடு செய்தனர். ஆலய வளாகத்தின் முன்பு முளைப்பாரியை வைத்து, கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி கும்மியடித்தனர்.

பாம்பனில் இளைஞர்கள் சிலர் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பியபோது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இளைஞர்கள் சிலர், மீன்பிடி படகுகளுக்கு சென்று மீனவர்களுடன் கேக் வெட்டி, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். தொடர்ந்து ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.