India Ai impact summit  web
இந்தியா

முதலில் சீனா Robo.. பின்பு கொரியா Drone.. AI மாநாட்டில் இந்தியாவுக்கு அவமானம்?

சீன Robot நாயை காட்சிப்படுத்திய GALGOTIAS பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது மட்டுமில்லாமல், AI மாநாட்டில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

PT WEB

டெல்லியில் நடைபெற்ற இந்தியா ஏஐ மாநாட்டில் சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பு எனக் காட்டியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. GALGOTIAS பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரிய நிலையில், கொரிய ட்ரோன் பற்றிய புதிய சர்ச்சையும் எழுந்துள்ளது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சீன தயாரிப்பு Robot நாயை India AI Impact Summit 2026 எனும் தலைப்பில் நடைபெற்ற AI மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இதுபெரும் சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.

சீனா ரோபோவை தங்களுடைய என அறிவிப்பு!

டெல்லியில் நடைபெற்ற India AI Impact Summit 2026 AI மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். இதில் சீன தயாரிப்பு Robot நாயை இந்திய தயாரிப்பு என GALGOTIAS பல்கலைக்கழகத்தால் காட்சிப்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த உண்மையை வெளிச்சம் காட்டி மக்கள் பார்வைக்கு கொண்டு வந்த நெட்டிசன்கள், Robot நாயை காட்சிப்படுத்திய GALGOTIAS பல்கலைக்கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்.

Galgotias University stall

GALGOTIAS பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டதாக காட்சிப்படுத்தப்பட்ட Robo நாய் சீனாவின் Unitree எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று வெளியான செய்தியால் சமூக வலைத்தளங்களில் இந்தியாவுக்கு கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பியது.

Unitree robot dog

இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், GALGOTIAS பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், AI மாநாட்டில் இருந்த அப்பல்கலைக்கழகத்தின் Stall-ஐ மொத்தமாக காலி செய்தும் வெளியேறியுள்ளது. முன்னதாக, அவர்களின் பெவிலியனுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சீனா ரோபோவை தொடர்ந்து கொரியா ட்ரோன்..

இந்தசம்பவம் பூதாகரமாக வெடித்திருக்கும் சூழலில், தற்போது அந்த Stall-ல் காட்சிப்படுத்தப்பட்ட Soccer Drone குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அதாவது இதன் முழு உருவாக்கமும் GALGOTIAS பல்கலைக்கழகம் மூலம் தான் உருவாக்கப்பட்டது என்றும், இது இந்தியாவின் முதல் Soccer Drone Arena என்றும் அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெண்ணால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது வணிக ரீதியாகவே தென் கொரியாவில் கிடைக்கபெறுகிறது என்று சமூக வலைதளவாசிகளால் கண்டறியப்பட்ட பின் இது குறித்தான கேள்வியும் அதிகம் எழுப்பட்டு வருகிறது.

இதனை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது, முன்பு சீனா, தற்போது கொரியாவா.. உலகம் சுற்றி Galgotias பல்கலைக்கழகம் அனைத்து புத்தாக்கத்தையும் கடனாக வாங்கியுள்ளது என்ற விமர்சனத்தை பெற்றுவருகிறது.

Galgotias professor Neha singh Courtesy ; The week

அதே போல், Robot நாய் மற்றும் Soccer Drone குறித்தும் விளக்கமளித்து பேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆசிரியர் நேகா சிங், தற்போது இதுகுறித்து பேசியுள்ளார். அதில், ஒரு தவறான விளக்கத்தின் மூலம் இணையத்தில் இது புயலைக் கிளப்பியுள்ளது. நான் சொல்ல விரும்பியதை என்னால் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை, அல்லது நான் சொல்ல விரும்பியதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் மேலாண்மையில் தொடர்புத் துறையில் ஆசிரிய உறுப்பினராக இருக்கிறேனே தவிர AI-ல் அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்போது செய்தியாளர்களிடம் சற்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். பல்கலைக்கழக நிர்வாகமும் ஆசிரியை ராஜினாமா செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் பிரமாண்ட AI மாநாட்டில் தர்மாக்கோலில் உருவாக்கப்பட்ட Drone-ஐ காட்சிப்படுத்தியதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.