இந்தியா

பாபா ராம்தேவ் உடன் அன்பை பகிர்ந்து கொண்ட தலாய் லாமா

பாபா ராம்தேவ் உடன் அன்பை பகிர்ந்து கொண்ட தலாய் லாமா

webteam

மும்பையில் நடந்த உலக அமைதி மற்றும் நல்லிணக்க கருத்தரங்கு நிகழ்ச்சியின்போது புத்த மதத்தலைவர் தலாய் லாமாவும், யோகா குரு பாபா ராம்தேவும் பங்கேற்றனர்.

உலக ‌அமைதி தொடர்பாக முக்கியமான கருத்துகளை புத்த மதத்தலைவர் தலாய் லாமாவும், யோகா குரு பாபா ராம்தேவும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு இடையே தலாய் லாமா, ‌‌பாபா ராம்தேவ்வின் தாடியை பிடித்து இழுத்து விளையாடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவரது இந்த செய்கையை, பாபா ராம்தேவும் ரசித்தபடி இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவரது தட்டையான வயிற்றுப் பகுதியை பாராட்டும் வகையில் தலாய் லாமா நட்புடன் கையால் குத்தினார். அப்போது ராம்தேவ் உட்டானா யோகாசனம் செய்து காண்பித்து தலாய் லாமாவை ஆச்சரியப்பட வைத்தார்.