இந்தியா

பேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி!

பேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி!

webteam

கேரளாவில் பேருந்தின் முன்பக்க சக்கரம் இருக்கும் பகுதியில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், அதிர்‌ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. 

இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டியை அவருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து நெருக்கமாக வந்து மோதியது. இதில், பேருந்தின் முன்பக்க சக்கரம் இருக்கும் பகுதியில் அவர் சிக்கியுள்ளார். அவர் அப்படியே இழுத்து வரப்பட்டதைக் கண்ட மக்கள் பேருந்தை நிறுத்தி‌னர்.

இதனால் அவர் நூலிழையில் உயிர்தப்பினார். கோழிக்கோடு மாவட்டம் என்கபுழா என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த காட்சிகள், அங்கு ஒரு கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.