இந்தியா

கிணற்றில் தவறி விழுந்த விஷப் பாம்பு - பாதுகாப்பாக மீட்ட தன்னார்வலர்கள்

JustinDurai

கடும் விஷத்தன்மை உள்ள அந்த நல்ல பாம்பை கிணற்றில் இருந்து உயிருடன் பிடித்து அருகில் உள்ள காட்டில் பத்திரமாக விட்டனர் பாம்புபிடி தன்னார்வலர்கள்.  
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள ஒரு கிணற்றுக்குள் நல்ல பாம்பு ஒன்று விழுந்து பல மணி நேரமாக தவித்து வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அரசு சாரா வனவிலங்கு ஆராய்ச்சி அமைப்பின் தன்னார்வலர்கள், கிணற்றுக்குள் இறங்கி பெரும் போராட்டத்துக்குப் பின் அந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து அருகில் உள்ள காட்டில் பத்திரமாக விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



பிடிபட்ட பாம்பு அதிக நச்சுத்தன்மை உள்ள கண்ணாடி நாகம் என என கூறப்படுகிறது. இந்த பாம்புகள் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும்.

இதையும் படிக்க: 'என்னதான் நடக்குதுனு பார்ப்போம்' பெண்ணின் கூந்தலில் கூடு கட்டிய பறவை - சுவாரஸ்ய சம்பவம்