இந்தியா

கேரளா: மூன்று மாதங்களில் 66 சிறுவர்கள் தற்கொலை!!

கேரளா: மூன்று மாதங்களில் 66 சிறுவர்கள் தற்கொலை!!

webteam

(கோப்பு புகைப்படம்)

கேரளாவில் மூன்று மாதங்களில் 66 சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 25 முதல் ஜூலை 9-ம் தேதி வரை 18 வயதிற்கும் கீழ் உள்ள 66 சிறுவர்கள் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,''குழந்தைகளிடம் பழகும்போது அவர்களின் குணநலன்கள் உணர்ந்து பெற்றோர்கள் உறவாட வேண்டும். மனரீதியாக அவர்களின் ஆசைகள், எண்ணங்களை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மனதை துன்புறுத்தும் வகையிலும், மனதிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகைகளிலும் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.இந்த பிரச்னைக்கு தீர்வு காண குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு “கவுன்சிலிங்” போன்றவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களின் மனரீதியான பாதிப்புகளுக்கு கூடுதல் சிகிச்சைகளும், அதற்கான வசதிகளும் மாநிலத்திற்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகள் தற்கொலைகளை தடுக்க, மாநில தீயணைப்புத்துறை தலைவரும் ஐ.பி.எஸ்., அதிகாரியான ஸ்ரீலேகா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.