இந்தியா

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் 13 பேர் உயிரிழப்பு: 5பேர் மீது வழக்குப்பதிவு

sharpana

மகாராஷ்டிராவில் ஐந்துமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்,  நான்கு வயது குழந்தை 19 மணிநேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம்  ராய்காட் மாவட்டத்திலுள்ள ஐந்து மாடி கட்டடத்தில் 40 குடும்பங்கள் வசித்துவருகின்றன.  கடந்த,  ஆகஸ்ட்- 27 ந்தேதி மாலை  திடீரென்று ஏற்பட்ட கட்டட விபத்தில்  13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை அதிர வைத்துள்ளது. 

கட்டட இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்டுக்கொண்டிருந்தபோது, உள்ளே 4 வயது குழந்தையின்  அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக, அக்குழந்தையை மீட்க ஆரம்பித்தது மீட்புக்குழு. கிட்டத்தட்ட, 19 மணிநேர கடுமையான போராட்டத்துக்குப்பிறகு குழந்தை பதிரமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்தது.  

ஆனால், அக்குழந்தையின் தாயும் இரண்டு சகோதரிகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டார்கள். துபாயிலிருந்து வந்த அக்குழந்தையின் தந்தை கண்ணீர் விட்டு அழுத காட்சி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தரமற்ற கட்டட பொருட்களால் சரியான முறையில் கட்டப்படாததால் கட்டடம் இடிந்துவிழுந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது காவல்துறை.