இந்தியா

குழந்தையுடன் சேர்த்து பொம்மை கால்களிலும் கட்டுபோட்ட மருத்துவர்கள்: வைரலாகும் புகைப்படம்!

JustinDurai
சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அடம்பிடித்த குழந்தைக்கு நூதன முறையை கையாண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த புகைப்படம் வைரலாகி உள்ளது.
ஒரு வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் டெல்லி அரசு எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
அந்த குழந்தையின் ஒரு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த குழந்தை ஒரு இடத்தில் இருக்காமல் மருத்துவர்களை படாதபாடு படுத்தியது.  இதனால் எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பிய நிலையில் குழந்தை, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் ஒரு புதிய யோசனையை தெரிவித்தார்.
அதன்படி, குழந்தைக்கு மிகவும் பிடித்தமான பொம்மையை மருத்துமனைக்கு கொண்டு வந்தனர். முதலில் அந்த பொம்மைக்கு சிகிச்சை அளிப்பது போல் மருத்துவர்கள் காலில் கட்டு போட்டனர். அதனைப் பார்த்த குழந்தையும் தனக்கு மருத்துவர்கள் கட்டுப்போட்டு சிகிச்சை அளிக்க ஒப்புக் கொண்டது.
இதையடுத்து குழந்தையுடன் பொம்மையும் நோயாளியாக மாறியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி உள்ளது.