இந்தியா

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை...உயிர் தப்பிய அதிசயம்- சிசிடிவி

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை...உயிர் தப்பிய அதிசயம்- சிசிடிவி

webteam

இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயம் நடந்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் டிகாம்கர் பகுதியை சேர்ந்தவர் ஆஷிஸ் ஜெயின். இவரது குழந்தை, வீட்டின் இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் குழந்தை தடுமாறி கீழே விழுந்துள்ளது. அந்த சமயத்தில் சாலையில்  ரிக்‌ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை ரிக்‌ஷாவில் விழுந்து உயிர் தப்பியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்தச் சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை ஆஷிஸ் ஜெயின்,“என்னுடைய குழந்தை இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக குழந்தை ரிக்‌ஷாவில் விழுந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் என்னுடைய குழந்தையை பரிசோதித்து பார்த்து நலமாக உள்ளதாக கூறினர்” எனத் தெரிவித்துள்ளார்.