இந்தியா

“முதலமைச்சர் பதவியை பெறுவதில் சிவசேனா வெற்றி பெறும்”- சஞ்சய் ராவத்..!

“முதலமைச்சர் பதவியை பெறுவதில் சிவசேனா வெற்றி பெறும்”- சஞ்சய் ராவத்..!

Rasus

மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனாதான் வெற்றி பெறும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனாதான் வெற்றி பெறும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நிலவுவது குழப்பம் அல்ல என்றும் நீதி உரிமைக்காக நடைபெறும் போராட்டம் என்றும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும் மகாராஷ்ராவின் அரசியல் மாறிக் கொண்டு இருப்பதாகவும் அதனை நீங்கள் காண்பீர்கள் எனவும் அவர் கூறினார்.