இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பெயர் பரிந்துரை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பெயர் பரிந்துரை

webteam

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமிக்கலாம் என தற்போதைய தலைமை நீதிபதி ஜே எஸ் கெஹர் பரிந்துரைத்துள்ளார். 

நீதிபதி கெஹர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஓய்வுபெறவுள்ளார். விதிகளின்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என தற்போதைய தலைமை நீதிபதியிடம் அரசு கேட்க வேண்டும். அதன்படி சட்ட அமைச்சர் கெஹரின் பரிந்துரையை கேட்டார். அதற்கு தீபக் மிஸ்ராவின் பெயரை தலைமை நீதிபதி கெஹர் பரிந்துரைத்துள்ளார். 

தீபக் மிஸ்ரா குறித்து சில தகவல்கள்.....

1. 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி ஒடிசா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார் தீபக் மிஷ்ரா. 

2. 1997 மார்ச் மாதத்தில் மத்திய பிரதேச் உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட பின்னர் 1997 டிசம்பர் மாதம் பணி நிரந்தரம் செய்யப்பட்டார். 

3. 2009 அம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2010 ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். 

4. கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற தீபக் மிஸ்ரா பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 

5. ஜல்லிகட்டு விவகாரத்தில் பல சட்ட சிக்கல்கள் எழுந்த போது சாதுர்யமாக அணுகி தீர்ப்பு வழங்கினார். 

6. 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகுப் மேமன் தூக்கு தண்டனை தொடர்பான வழக்கின் விசாரணையை நள்ளிரவில் நடத்தி தூக்கு தண்டனையை உறுதி செய்தார். 

7. காவிரி வழக்கினை தொடர்ந்து விசாரித்து வரும் தீபக் மிஸ்ரா கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிருந்தபோது தனது கடும் கண்டனத்தை நீதிமன்றத்திலேயே தெரிவித்தார்.