இந்தியா

சத்தீஸ்கர்: ஒரேநாளில் 2 பெண்களை மணந்த நபர்; 'மிக மகிழ்ச்சியாக' இருப்பதாக கூறும் மனைவிகள்

சத்தீஸ்கர்: ஒரேநாளில் 2 பெண்களை மணந்த நபர்; 'மிக மகிழ்ச்சியாக' இருப்பதாக கூறும் மனைவிகள்

Veeramani

சத்தீஸ்கரை சேர்ந்த ஒரு விவசாயி, ஒரே நாளில் இரண்டு பெண்களை மணந்தார். அவருடைய மனைவிகள் இருவரும் "மிகவும் மகிழ்ச்சியாக" இருப்பதாகக் கூறினர்.

விவசாயி சந்து மவுரியா என்பவர்  சத்தாரி மற்றும் ஹசீனா என்ற இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் சத்தீஸ்கரின் ஜகதல்பூரில் ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியது. இந்த மூவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பு ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.  ஹசீனாவும், சத்தாரியும் சந்து மவுரியா என்ற நபரைக் காதலித்தனர். இருவரும் ஒன்றாக வாழவும் ஒப்புக்கொண்டனர். இதனால் இவர்கள் மூவருக்கும் ஜனவரி 3-ஆம் தேதி திருமணம் நடந்தது. இப்போது அவர்களின் திருமணம் வைரலாகியிருக்கிறது.

முதலில் சந்து, சத்தாரியை காதலித்து ஒன்றாக வாழ முடிவு செய்தார். சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் ஹசீனாவை வீட்டிற்கு அழைத்து வந்தார். மூவரும் ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்தனர். இந்த திருமணத்தில் 600-700 திருமண விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மூவரும் தொடர்ந்து விவசாயிகளாக இணைந்து பணியாற்றி மகிழ்ச்சியுடன் வாழவும் முடிவு செய்துள்ளனர்.