இந்தியா

சென்னை: கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

webteam

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி இன்று உயிரிழந்தார்

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு  கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,488 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று நிலவரப்படி 84 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி இன்று உயிரிழந்தார்.