குடியுரிமை திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
#IndiaSupportsCAA என்ற ஹேஷ்டேக் இட்டு , குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி தனது தனிப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதே குடியுரிமை திருத்தச்சட்டத்தின் நோக்கம் என்றும் இந்த சட்டம் யாருடையை குடியுரிமையையும் பறிக்காது என்றும் கூறியுள்ளார். நமோ செயலியில் இது தொடர்பாக பதிவுகளை பகிர்ந்து குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கான ஆதரவை தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
இந்தச் சட்டத்துக்கு ஆதரவாக சத்குரு ஜகி வாசுதேவ் வெளியிட்ட வீடியோ பிரதமரின் டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.