திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10ஆயிரம் ரூபாய் நன்கொடையாக கொடுக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட் மூலம் அன்று மாலையே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட நடைமுறைக்கு முன், ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு 10ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு, 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி, டிக்கெட் வாங்கியதற்கு அடுத்த நாள் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்.
இந்த பழைய முறையால், பக்தர்கள் 2, 3 நாட்கள் திருமலையில் தங்கியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனை தடுக்கும் வகையில், நன்கொடையாளர்கள் டிக்கெட் வாங்கிய அதே தினம் மாலையிலேயே ஏழுமலையான தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.