சந்திரயான் 3
சந்திரயான் 3 ISRO Twitter
இந்தியா

சந்திரயான் 3-ன் மிகப்பெரிய Twist.. "Welcome, Buddy!" Entry கொடுத்த சந்திரயான் 2!

PT WEB

சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி எல்.வி.எம் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 179 கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்ட பாதையில் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம், 16 நிமிடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் 3 விண்கலம் சென்றது.

சந்திரயான் 3

அப்படி நிலவின் சுற்றுவட்ட பாதையில் விண்கலம் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. தொடர்ந்து லேண்டரில் உள்ள கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் காணொளியையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 17ஆம் தேதி, உந்துவிசை தொகுதியிலிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து லேண்டரை தரையிறங்க ஆயத்தம் செய்யும் கடைசி உயரக்குறைப்பு நடவடிக்கை நேற்று (ஆகஸ்ட் 20) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் இறங்க உள்ளது. இதற்கிடையே, சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு வெற்றிகரமாக தகவல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது சந்திரயான் 3 லேண்டர். இதுதொடர்பான முழு விவரத்தையும் செய்தியில் உள்ள இணைப்பில் காணலாம்.