இந்தியா

விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2

விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2

webteam

இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த திங்கள்கிழமை காலை மார்க்-3 ராக்கெட் மூலம், ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படவிருந்தது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 56 நிமிடங்களுக்கு முன்னதாக, விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், அந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. அதன்படி இன்று மதியம் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.