இந்தியா

தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு

தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்பு

webteam

தெலங்கானா மாநிலத்தில் 2 வது முறையாக சந்திரசேகர ராவ் முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

தெலங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டது. பாஜக தனித்து களம் கண்டது. இதனால், மும்முனை போட்டி நிலவியது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே கூறிய நிலையில் மொத்தமுள்ள 112 தொகுதிகளில் டிஆர்எஸ் 88 இடங்களில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் 2 வது முறையாக சந்திரசேகர ராவ் முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமானம் செய்து வைத்தார். ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

பதவி ஏற்பு விழாவையொட்டி ராஜ்பவன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரையில் பொதுமக்கள் ராஜ்பவன் சாலையை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கு‌ம் படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ள‌ார்.